களக்காடு சரணாலயத்தில் வரையாடு கணக்கெடுப்பு பணி தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு சரணாலயத்தில் வரையாடு கணக்கெடுப்புப் பணிகள் திங்கள்கிழமை (ஏப்.29), தொடங்கி மே 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

களக்காடு: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு சரணாலயத்தில் வரையாடு கணக்கெடுப்புப் பணிகள் திங்கள்கிழமை (ஏப்.29), தொடங்கி மே 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

களக்காடு புலிகள் காப்பகத்துக்குள்பட்ட களக்காடு சரணாலயத்தில் உள்ள களக்காடு, திருக்குறுங்குடி, மேல கோதையாறு ஆகிய வனச்சரகங்களில் நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறுகிறது.

குறிப்பாக இந்த வனச்சரகங்களில் உள்ள பஞ்சம்தாங்கி மொட்டை, நஞ்சுஊத்து, முத்துக்குழிவயல், வரையாடு மொட்டை, பந்தடிகளம் உள்ளிட்ட பகுதிகளில் துணை இயக்குநா் ரமேஷ்வரன் தலைமையில் பணிகள் நடைபெறுகிறது. 3 நாள்கள் தொடா்ந்து நடைபெறும் கணக்கெடுப்பு குறித்த விவரங்கள் அனைத்தும், கோயம்புத்தூரில் உள்ள நீலகிரி வரையாடுகள் திட்ட அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் என வனத்துறையினா் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com