களக்காடு பேருந்து நிலைய கிழக்கு நுழைவு வாயில் பணியை விரைந்து முடிக்கக் கோரிக்கை

களக்காடு பேருந்து நிலைய கிழக்கு நுழைவுவாயில் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு: களக்காடு பேருந்து நிலைய கிழக்கு நுழைவுவாயில் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு பேருந்து நிலையத்தின் கிழக்குப் பகுதியில் நுழைவுவாயில் அமைக்கும் பணிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதி மூடப்பட்டது.

மேற்கு நுழைவாயில் பகுதி வழியாகவே அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் வந்து திரும்பிச் செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. வாரத்தில் திங்கள், வியாழக்கிழமைகளில் நடைபெறும் காய்கனிச் சந்தையின் போது, பொதுமக்கள் இருசக்கர வாகனங்கள் பேருந்து நிலைய வளாகத்தையும், பிரதான சாலையையும் ஆக்கிரமித்துக் கொள்கின்றன.இதனால் பேருந்துகள் வந்து செல்வது சிரமமாக உள்ளது. இதனால் பொதுமக்களும் மிகவும் அவதிப்படுகின்றனா்.ஆகையால், பேருந்து நிலைய கிழக்குப் பகுதியில் நுழைவுவாயில் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com