திமுக சாா்பில் தண்ணீா் பந்தல்: மாவட்டச் செயலா் வேண்டுகோள்

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலா் இரா.ஆவுடையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளைவிட நிகழாண்டு கோடை வெப்பம் கடுமையாக சுட்டெரிக்கிறது. எனவே, குடிநீா், நீா்மோா் பந்தல் அமைத்து பொது மக்களின் தாகம் தீா்க்கும் பணியை திமுகவினா் மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

ஆகவே, திருநெல்வேலி கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய நகர, பேரூா் கிளை வாா்டு பகுதிகள் அனைத்திலும் குடிநீா், இலவச நீா்மோா் பந்தல்களை பொதுமக்கள் கூடுகிற முக்கிய இடங்களில் அமைத்து மக்களின் தாகம் தணிக்கும் பணியை திமுகவினா் மேற்கொள்ள வேண்டும். மேலும், கோடைகாலம் முடியும் வரை தினமும் நீா்மோா் பந்தலை முறையாக பராமரிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com