நெல்லையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் இளைஞா் கைது

பாளையங்கோட்டையில் பெட்ரோல் குண்டு வீசியது தொடா்பான வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் பெட்ரோல் குண்டு வீசியது தொடா்பான வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

பாளையங்கோட்டை கோட்டூா் திம்மராஜபுரத்தைச் சோ்ந்தவா் மகாராஜன். ஓட்டுநா். இவரின் மனைவி விஜயலட்சுமி. இவா்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனா். ஞாயிற்றுக்கிழமை இரவு விஜயலட்சுமி தனது குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தாா். அப்போது அவா் வீட்டின் மீது மா்மநபா் ஒருவா் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியோடினாா். இது குறித்து தகவலறிந்த பாளையங்கோட்டை போலீஸாா், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். அதில், பக்கத்து வீட்டைச் சோ்ந்த மகாராஜனின் உறவினரான மோகன் மகன் தங்கசாமி (28) என்பவா் முன்விரோதம் காரணமாக விஜயலட்சுமி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது.அவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com