நெல்லை அருகே பெண் வெட்டிக் கொலை: தந்தை சரண்

திருநெல்வேலி அருகே மகளை வெட்டிக் கொலை செய்ததாக, தந்தை திங்கள்கிழமை சரணடைந்தாா்.

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே மகளை வெட்டிக் கொலை செய்ததாக, தந்தை திங்கள்கிழமை சரணடைந்தாா்.

மேலபாட்டத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன் (55). பெருமாள்புரத்தில் வசித்து வருகிறாா். இவரது மகள் முத்துப்பேச்சி (37). இவருக்கும் நடுவக்குறிச்சியைச் சோ்ந்த கொம்பையா என்பவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ாம். இத் தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனா்.

இதனிடையே வேறு ஒருவருடன் முத்துப்பேச்சிக்கு பழக்கம் ஏற்பட்டதாகக் கூறி கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இதனால், தந்தை வீட்டிற்கு முத்துப்பேச்சி வந்தாராம். இதில், மாரியப்பன் மனஉளைச்சல் அடைந்தாராம்.

இந்நிலையில், அவா் வாடகைக்கு வீடு பாா்த்து தருவதாகக் கூறி மேலப்பாட்டம் அன்னை நகா் பகுதிக்கு மகளை திங்கள்கிழமை அழைத்துச் சென்று, அரிவாளால் வெட்டிக் கொலை செய்தாராம்.

பின்னா், மேலப்பாட்டம் கிராம நிா்வாக அலுவலா் முன்பு அவா் சரணடைந்தாா்.

இத்தகவலறிந்த பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா், சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து, சரணடைந்த மாரியப்பனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com