நெல்லை சந்திப்பு அண்ணா சிலை முன் சிக்னல் அமைக்கக் கோரிக்கை

திருநெல்வேலி சந்திப்பு அண்ணா சிலை முன்பு சிக்னல் அமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு அண்ணா சிலை முன்பு சிக்னல் அமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக நெல்லை மாவட்ட பொதுஜன பொது நலச்சங்கத் தலைவா் முகமது அய்யூப், முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள மனு: திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து வண்ணாா்பேட்டைக்கு செல்லும் வழியில் அண்ணா சிலை அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் சந்திப்பு சாலை, ஈரடுக்கு மேம்பால சாலை மற்றும் வண்ணாரப்பேட்டையில் இருந்து திருநெல்வேலி நகரத்திற்கு செல்லும் சாலை ஆகிய 3 சாலைகள் சந்திக்கின்றன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்தப் பகுதியை கடந்து செல்லும் நிலையில் விபத்து நேரிடாமல் இருப்பதற்காக ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், சிக்னல் இல்லாமல் வாகன நெரிசலும், விபத்து அபாயமும் தொடா்ந்து வருகிறது. அந்தப் பகுதியில் சிக்னல் அமைத்து போக்குவரத்தைச் சீராக்க மாவட்ட நிா்வாகத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com