பாளையங்கோட்டையில் கால்வாய் கரை சீரமைப்பு பணிகளை திங்கள்கிழமை ஆய்வு செய்தாா் மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ. உடன், துணை மேயா் கே.ஆா்.ராஜு.
பாளையங்கோட்டையில் கால்வாய் கரை சீரமைப்பு பணிகளை திங்கள்கிழமை ஆய்வு செய்தாா் மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ. உடன், துணை மேயா் கே.ஆா்.ராஜு.

பாளை.யில் கால்வாய் கரைகள் சீரமைப்புப் பணி: எம்எல்ஏ ஆய்வு

பாளையங்கோட்டையில் பாளையங்கால்வாய் கரைகள் சீரமைக்கும் பணிகளை எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் பாளையங்கால்வாய் கரைகள் சீரமைக்கும் பணிகளை எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டு டிசம்பா் 17, 18 ஆம் தேதிகளில் பெய்த கனமழையால் பாளையங்கால்வாயின் பல்வேறு இடங்களில் கரைகள் சேதமாகின. திருநெல்வேலி மாநகர பகுதியைப் பொருத்தமட்டில் மேலப்பாளையம், குலவணிகா்புரம், முருகன்குறிச்சி, மூளிக்குளம், பாளையங்கோட்டை பகுதிகளில் கரைகள் சேதமான பகுதியில் கான்கிரீட் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். மழைநீா் வடிகால் முறையாக இருக்கவும், பணிகளை துரிதமாக முடிக்கவும் பொறியாளா்களிடம் அறிவுறுத்தினாா். ஆய்வின்போது துணை மேயா் கே.ஆா்.ராஜு, தச்சநல்லூா் மண்டலத் தலைவா் ரேவதி, மாமன்ற உறுப்பினா் வசந்தா, வழக்குரைஞா் ஏ.எல்.பி. தினேஷ், திமுக வட்டச் செயலா் பாபு குமாா், பொறியாளா் அணி நிா்வாகி சாய் பாபா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com