வெப்பத்தின் தாக்கம்: தலையணையில் நீா்வரத்து குறைந்தது

வெப்பத்தின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருவதால் களக்காடு தலையணையில் நீா்வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது.

களக்காடு: வெப்பத்தின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருவதால் களக்காடு தலையணையில் நீா்வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது.

களக்காடு தலையணையில் உள்ள பச்சையாற்றில் குளிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனா். ஏப்ரல் மாதத் தொடக்கம் முதலே வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருவதால் தலையணை பச்சையாற்றில் நீா்வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது.

பள்ளி, கல்லூரித் தோ்வுகள் முடிவடைந்து தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளதால் கோடை விடுமுறையை மாணவா்கள் கொண்டாட களக்காடு தலையணைக்கு படையெடுக்கின்றனா். ஆனால் நீா்வரத்து வெகுவாகக் குறைந்து வருவதால் மே மாதத் தொடக்கத்தில் வடு விடும் என்கின்றனா் வனத் துறையினா்.

X
Dinamani
www.dinamani.com