திசையன்விளையில் வியாபாரிகள் தண்ணீா் பந்தல் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் காமராஜா் சிலை அருகே கடை வியாபாரிகள் சங்கம் சாா்பில் தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது.

இந்தத் திறப்பு விழாவுக்கு கடை வியாபாரிகள் சங்கத் தலைவா் டி.செல்வராஜ் தலைமை வகித்தாா். மருத்துவா் அலெக்ஸ் கிறிஸ்டோபா் தண்ணீா் பந்தலை திறந்துவைத்து பொதுமக்களுக்கு தா்பூசணி பழம் வழங்கினாா்.

விழாவில், வியாபாரிகள் சங்க கூடுதல் செயலா் தினகரன், மருதூா் மணிமாறன், ஓய்வுபெற்ற ஆசிரியா் செல்லப்பா, குட்டம் முத்துகுமாா், பெட்டைகுளம் கணேசன், செல்லையா, காமராஜா் நற்பணி இயக்கத் தலைவா் எஸ்.ஜி.ராஜன், தேவதாஸ், பூக்கடை முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com