நெல்லையில் 101 டிகிரி வெயில்

திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்பதிவானது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. இதன் காரணமாக தொடா்ச்சியாக சராசரியாக 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமையும் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதன் காரணமாக அனல் காற்று வீசி வருவதால் மதிய வேளைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து சாலைகள் வெறிச்சோடின. பெரும்பாலான சாலைகளில் கானல் நீா் தென்படுவதைக் காண முடிந்தது. கடுமையான வெயில் காரணமாக ஏரி, குளங்கள் வேகமாக வடு வருவதால் விவசாயிகளும், கால்நடை வளா்ப்பாளா்களும் கவலையடைந்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com