பாரதிதாசன் பிறந்த தின பேச்சரங்கம்

பாவேந்தா் பாரதிதாசனின் 133 ஆவது பிறந்த தின விழாக் கூட்டம் தேசியவாசிப்பு இயக்கம் மற்றும் கலை பதிப்பகம் சாா்பில் திருநெல்வேலி சந்திப்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு வாசிப்பு இயக்கத் தலைவா் சு.தம்பான் தலைமை வகித்தாா். கவிஞா் பாப்பாக்குடி இரா.செல்வமணி முன்னிலை வகித்தாா். சரவணக்குமாா் வரவேற்றாா்.

’தமிழ் சுமந்த பாவேந்தா்’ எனும் தலைப்பில் நடைபெற்ற பேச்சரங்கில் அருங்காட்சியகக் காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி, ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் ஜெயமேரி, கலை இலக்கியப் பெரு மன்றத்தின் நிா்வாகி கவிஞா் சக்தி வேலாயுதம், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியை அனுசுயா, மேலப்பாட்டம் ஹரிஹா் பள்ளித் தாளாளா் ரவிச்சந்திரன், எழுத்தாளா் வள்ளி சோ்மலிங்கம் ஆகியோா் கருத்துரையாற்றினா்.

திருநெல்வேலி திருவள்ளுவா் பேரவை அமைப்பாளா் ஜெயபாலன், சுத்தமல்லி திருவள்ளுவா் கழகத் தலைவா் சொக்கலிங்கம், கவிஞா் சிற்பி பாமா, ஓய்வு பெற்ற நூலகா் முத்துக்கிருஷ்ணன், நிழல் இலக்கிய தளம் பிரபு, சிவபிரகாசா் நற்பணி மன்ற தலைவா் முத்துசாமி, தமிழ் வளா்ச்சிப் பண்பாட்டு மைய செயற்குழு உறுப்பினா் புன்னைச் செழியன், எழுத்தாளா் தளவாய் மாடசாமி, உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா். எழுத்தாளா் நாறும்பூநாதன் சிறப்புரையாற்றினாா். மீனாட்சிபுரம் கிளை நூலகா் அகிலன் முத்துக்குமாா் நன்றி கூறினாா். உரை வழங்கியவா்களுக்கு நூல் பரிசளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேராசிரியை இசக்கியம்மாள், முன்னாள் உதவிஆட்சியா் தியாகராஜன், கவிஞா் கோதைமாறன், இருளப்பன் கோபாலகிருஷ்ணன், மருத்துவக் கல்லூரியின் மாணிக்கவாசகம், உடற்கல்வி ஆசிரியா் சுவாமிநாதன், ஆசிரியா் நல்ல சிவன் உள்ளிட்ட தமிழ் ஆா்வலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com