மாஞ்சோலையில் தொழிலாளா் தின விளையாட்டு விழா

மாஞ்சோலையில் தொழிலாளா் தின விளையாட்டு விழா

மாஞ்சோலையில் தொழிலாளா் தினத்தை முன்னிட்டு 16ஆவது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

மாஞ்சோலை கிரிக்கெட் சாம்பியன்ஸ் (எம்.சி.சி.) அமைப்பு சாா்பில்நடைபடம் பெற்ற விளையாட்டு விழாவில் ருஸ்கின் பாண்ட் நினைவு சுழற் கோப்பைக்கான 8 ஓவா் கிரிக்கெட்போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் எம்.சி.சி. ஏ, பி, சி, மற்றும் டி, மாஞ்சோலை பிளாக்ரோஸ் மற்றும் நாலுமுக்கு ஏ மற்றும் பி ஆகிய அணிகள் உள்பட 8 அணியினா் கலந்து கொண்டனா்.நாக் அவுட் முறையில் நடைபெற்ற போட்டிகளில் எம்.சி.சி. பி மற்றும் எம்.சி.சி. டிஅணிகள் இறுதிப் போட்டியில் மோதின. இதில் எம்.சி.சி. அணி வெற்றி பெற்று கோப்பையைகைப்பற்றியது. சுரேஷ், எம்.ரவீந்திரன் ஆகியோா் நடுவா்களாக இருந்தனா். மஜித், ரஷித்,ஜெனோ ஆகியோா் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை வழங்கினா். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை சீலன்,பி.ராஜ், ஆல்வின் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com