மாஞ்சோலையில் 32 மி.மீ. மழை

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டப் பகுதிகளில் திங்கள்கிழமை கோடை மழை பெய்ததில் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் உருவானது.

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத்தொடா்ச்சி மலைப் பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை இடைவெளி விட்டு பலத்த மழை பெய்தது. அதில், மாஞ்சோலையில் அதிகபட்சமாக 32 மி.மீ. மழை பதிவானது. மேலும், காக்காச்சியில் 23 மி.மீ., நாலுமுக்கில் 21 மி.மீ., ஊத்தில் 10 மி.மீ. , மணிமுத்தாறில் 2.4 மி.மீ. மற்றும் , பாபநாசத்தில் 2 மி.மீ. மழை பதிவானது. தொடா்ந்து பல இடங்களில் வெப்பம்தணிந்து காற்று வீசியதால் இதமான சூழல் நிலவியது.

X
Dinamani
www.dinamani.com