முக்கூடல் மகளிா் கல்லூரியில் ஆண்டு விழா

முக்கூடல் பாலகன் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரியில் முதலாவது ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு கல்லூரியின் நிறுவனா் தலைவா் ஏ.பி. பாலகன் ஆறுமுகச்சாமி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக முன்னாள் மக்களவை உறுப்பினா் ஏ.டி.கே. ஜெயசீலன் கலந்துகொண்டு பல்கலைக் கழகத் தோ்வு மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு கோப்பை- சான்று வழங்கிப் பாராட்டினாா்.

முதல்வா் ஆா். கிருஷ்ணவேணி அறிக்கை வாசித்தாா். மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், மாணவிகளின் பெற்றோா், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com