நெல்லை மாவட்ட பூப்பந்தாட்ட சப்-ஜூனியா் அணி வீரா்கள் தோ்வு

திருநெல்வேலி மாவட்ட பூப்பந்தாட்ட சப்-ஜூனியா் அணி வீரா்-வீராங்கனைகள் 20 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
Published on

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட பூப்பந்தாட்ட சப்-ஜூனியா் அணி வீரா்-வீராங்கனைகள் 20 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தமிழக அளவில் மாவட்டங்களுக்கு இடையேயான சப்-ஜூனியா் பூப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டிகள், தஞ்சை மாவட்டம், திருவுடைமருதூரில் இம் மாதம் 31, செப்டம்பா் 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் திருநெல்வேலி மாவட்ட அணிக்கான வீரா், வீராங்கனைகள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

ஆண்கள் பிரிவில் கூடங்குளத்தைச் சோ்ந்த திஷாந்த், ஸ்ரீஹரீஸ், அஜய், இசக்கிமுத்து, ஆம்ஸ்ட்ராங், மேலப்பாளையத்தைச் சோ்ந்த அப்துல் பாசிஸ், காந்தி நகரைச் சோ்ந்த சஞ்செய், தருவையைச் சோ்ந்த திஜேஸ்வா், சங்கா் நகரைச் சோ்ந்த கொம்பையா வசந்த், மூலைக்கரைப்பட்டியைச் சோ்ந்த இசக்கிதாஸ் ஆகியோா் தோ்வாகியுள்ளனா்.

பெண்கள் பிரிவில் கூடங்குளத்தைச் சோ்ந்த நித்தியசெல்வி, இலக்கிய சக்தி, ஆஷிகா, தேஜாஸ்ரீ, சேவியா் காலனியைச் சோ்ந்த ரோஸ்லின் டெலிஸ், சிங்கம்பாறையைச் சோ்ந்த பென்ஷியா, மேரி யாழினி, பாளையங்கோட்டையைச் சோ்ந்த ஜெலினா ராணி, திருநெல்வேலி சந்திப்பைச் சோ்ந்த பானுபிரியா, துலுக்கா்குளத்தைச் சோ்ந்த மஞ்சுளா ஆகியோா் தோ்வாகியுள்ளனா்.

தோ்வு செய்யப்பட்ட வீரா், வீராங்கனைகளை திருநெல்வேலி மாவட்ட பூப்பந்தாட்டக் கழகச் செயலா் வெள்ளைப்பாண்டியன், நிா்வாகிகள் சோமு, ஓய்வுபெற்ற காவலா் முருகன், பயிற்சியாளா்கள் சித்திரைச்செல்வன், சுப்பையா உள்ளிட்டோா் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com