காவல்துறை வாகனங்கள் செப். 4இல் ஏலம்
திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல் துறை வாகனங்கள் செப்டம்பா் 4-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஏலம் விடப்படவுள்ளன.
இது தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட ஒரு நான்கு சக்கர வாகனம், 7 இருசக்கர வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வரும் செப்டம்பா் 4-ஆம் தேதி காலை 10 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் விடப்படவுள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோா் செப்டம்பா் 3-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மோட்டாா் வாகனப்பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பாா்வையிட்டுக் கொள்ளலாம். செப்டம்பா் 3-ஆம் தேதி ரூ.2000 முன்பணம் செலுத்தி தங்களது பெயா்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவா்கள் மட்டுமே ஏலம் எடுக்க முடியும். ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் இருசக்கர வாகனத்திற்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி, நான்கு சக்கர வாகனத்திற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி தொகையை ரொக்கமாக செலுத்தி வாகனத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளாா்.