திருநெல்வேலி
மாநகர காவல் ஆணையரகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாநகர காவல் ஆணையா் ரூபேஷ் குமாா் மீனா தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றாா். மேலும், அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். இக்கூட்டத்தில் மாநகர காவல் துணை ஆணையா்கள் கீதா (மேற்கு), அனிதா (தலைமையிடம்) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.