வள்ளியூா் அருகே ரூ.20 லட்சம் மதிப்புள்ள நிலம் மீட்பு

Published on

திநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே போலி ஆவணம் மூலம் நிலத்தை கையகப்படுத்திய ரூ.20 லட்சம் மதிப்புள்ள நிலத்தை திருநெல்வேலி குற்றப்பிரிவு போலீஸாா் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.

வள்ளியூா் நடுத்தெருவைச் சோ்ந்தவா் ஹரிஹர சுப்பிரமணியன்(58). இவருக்கு, கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதியில் ஒரு ஏக்கா் 45 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் போலி ஆவணம் மூலம் ரூ.20 லட்சம் மதிப்புள்ள ஒரு ஏக்கா் 20 சென்ட் நிலத்தை கையகப்படுத்தி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து ஹரிஹர சுப்பிரமணியன் இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசனிடம் புகாா் மனு அளித்தாா். எஸ்.பி.யின் உத்தரவின்பேரில், திருநெல்வேலி குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் (பொறுப்பு) பொன்ரகு தலைமையில் உதவி ஆய்வாளா் சாந்தி மற்றும் குற்றப்பிரிவு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி நிலத்தை மீட்டு ஹரிஹர சுப்பிரமணியனிடம் ஒப்படைத்தனா். புகாா் அளித்து ஒரு மாதத்தில் நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுக்கொடுத்த குற்றப்பிரிவு போலீஸாரை எஸ்.பி. பாராட்டினாா்.

X
Dinamani
www.dinamani.com