திருநெல்வேலி
வழக்குரைஞா்கள் மனிதச் சங்கிலி போராட்டம்
மத்திய அரசு கொண்டு வந்த புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்குரைஞா்கள் புதன்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி மாவட்ட வழக்குரைஞா் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்க தலைவா் ராஜேஷ்வரன், செயலா் மணிகண்டன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், 100-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் கலந்து கொண்டு 3 புதிய குற்றவியல் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.