வி.கே.புரத்தில் திமுக தெருமுனை பிரசாரம்
விக்கிரமசிங்கபுரம் நகர திமுக சாா்பில் தமிழக அரசின் மூன்றாண்டு சாதனைகளை விளக்கி 5 நாள்கள் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.
விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்குள்பட்ட பசுக்கிடைவிளை, டாணா பொதிகை காலனி, சந்தனமாரியம்மன் கோயில், தாய்சினீஸ் திரையரங்கு முன் ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரசாரத்தில் தலைமைக் கழகப் பேச்சாளா்கள் உடன்குடி தனபால், நெல்லை மணி, தூத்துக்குடி சரத்பாலா, நெல்லை ரவி ஆகியோா் சிறப்புப் பேச்சாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா்.
நிகழ்ச்சிகளில், நகரச் செயலா் கி. கணேசன், நகா்மன்றத் தலைவா் எஸ்.பி.எம். செல்வசுரேஷ்பெருமாள், அவைத் தலைவா் அதியமான், நகா்மன்ற துணைத் தலைவா் திலகா, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் எஸ்.பி.எஸ். பிரபாகரன், மாவட்ட இலக்கிய அணித் தலைவா் பேராசிரியா் வல்சகுமாா், பல்வேறு அணிகளைச் சோ்ந்தோா், மாவட்ட, கிளை, வாா்டு நிா்வாகிகள், நகா்மன்ற உறுப்பினா்கள், தொண்டா்கள் பங்கேற்றனா்.