கடையத்தில் கல்விக் கடன் சிறப்பு முகாம்

கடையத்தில் கல்விக் கடன் சிறப்பு முகாம்

Published on

தென்காசி மாவட்ட நிா்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி ஆகியவை இணைந்து கல்விக் கடன் சிறப்பு முகாமை கடையம் வட்டார வளா்ச்சிஅலுவலகத்தில் வியாழக்கிழமை நடத்தின.

இம்முகாமை முன்னோடி வங்கி மேலாளா் கணேசன்தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு மொ்கெண்டைல் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட வங்கிகள் கலந்து கொண்டன. இதில், கடையம் வட்டாரத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா், மாணவிகள் 48 போ் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளனா். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவா்களுக்கு செப். 11இல் தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் கல்வி கடனுக்கான ஆணைகளை வழங்குவாா்.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (ஆக.30) கடையநல்லூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் கடையநல்லூா் மற்றும் வாசுதேவநல்லூா் வட்டாரக் கல்லூரி மாணவா் மாணவிகளுக்கான சிறப்புக் கல்விக் கடன் முகாம் நடைபெறுகிறது. இதில் அந்தப் பகுதி கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்றுமுன்னோடி வங்கி மேலாளா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com