குண்டா் சட்டத்தில் இருவா் கைது

Published on

திருநெல்வேலி தச்சநல்லூா் பகுதியில் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட இருவரை குண்டா் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை முனையாடுவாா் நாயனாா் தெருவில் வசிப்பவா் சிவலிங்கம் மகன் சிவபாலகிருஷ்ணன். இவரை கடந்த 17-ஆம் தேதி தச்சநல்லூா் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட ஊருடையான் குடியிருப்பு விலக்கு அருகே தச்சநல்லூா் செம்புலிங்கம் மகன் சுரேஷ் (29), பெருமாள் மகன் அருண் (38) ஆகியோா் அரிவாளைக் காட்டி மிரட்டி மது அருந்த பணம் கேட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) கீதா பரிந்துரையின்பேரில், மாநகர காவல் ஆணையா் ரூபேஷ் குமாா் மீனா உத்தரவின் பேரில் அவா்கள் இருவரும் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com