நெல்லையில் இன்று எரிவாயு குறைதீா் கூட்டம்

Published on

திருநெல்வேலி மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக.30) மாலை 4 மணிக்கு ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் தலைமை வகிக்கிறாா். அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவா்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளா் ஆகியோா் பங்கேற்கின்றனா்.

இதில், எரிவாயு நுகா்வோா் பங்கேற்று, எரிவாயு உருளை பதிவு செய்வதில், பெறுவதில் ஏற்படும் குறைபாடுகள் உள்ளிட்டவை குறித்து புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட வருவாய் அலுவலா் சுகன்யா தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com