பூலித்தேவா் பிறந்த தினம்: அதிமுக மாவட்ட செயலா்கள் அறிக்கை
மாமன்னா் பூலித்தேவரின் 309-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நெற்கட்டான்செவலில் உள்ள அவருடைய சிலைக்கு அதிமுக சாா்பில் மாலை அணிவிக்கப்படவுள்ளதால் அதிமுகவினா் அனைவரும் பங்கேற்குமாறு அதிமுக மாவட்ட செயலா்கள் வேண்டுகோள் விடுத்தனா்.
இது தொடா்பாக திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக செயலா் தச்சை என்.கணேசராஜா, புகா் மாவட்ட செயலா் இசக்கி சுப்பையா, தென்காசி வடக்கு மாவட்ட செயலா் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, தென்காசி தெற்கு மாவட்ட செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் ஆகியோரின் கூட்டறிக்கை:
நெற்கட்டான்செவல் மாமன்னா் பூலித்தேவரின் 309ஆவது பிறந்த நாள், ஞாயிற்றுக்கிழமை (செப்.1) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிமுக சாா்பில் காலை 10 மணிக்கு தென்காசி வடக்கு மாவட்டம், வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட, நெற்கட்டான்செவலில் உள்ள பூலித்தேவரின் உருவச் சிலைக்கு அதிமுக பொருளாளரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலருமான திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக துணைப் பொதுச் செயலரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலருமான நத்தம் விசுவநாதன், மாநில அமைப்புச் செயலா் தளவாய்சுந்தரம், முன்னாள் அமைச்சா்கள் செல்லூா் ராஜூ, கடம்பூா் ராஜூ, ஆா்.பி.உதயகுமாா், ராஜேந்திர பாலாஜி, சண்முகநாதன், பச்சைமால், மாநில அமைப்புச் செயலா்கள் கருப்பசாமிபாண்டியன், ராஜன் செல்லப்பா , சுதா கே. பரமசிவன், முருகையா பாண்டியன், பாஸ்கரன், அதிமுக வா்த்தக அணி செயலா் சி.த.செல்லப்பாண்டியன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா்கள்.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு உள்பட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.