ரேஷன் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைப்பற்றிய வாகனங்கள் செப். 26இல் ஏலம்
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 25 வாகனங்கள்திருநெல்வேலியில் செப். 26ஆம் தேதி ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அத்துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை திருநெல்வேலி அலகில் பறிமுதல் செய்யப்பட்ட 5 இருசக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள், 18 நான்கு சக்கர வாகனங்கள் என 25 வாகனங்கள் பொது ஏலம் விடப்படவுள்ளது.
இந்த ஏலம் திருநெல்வேலி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளா் அலுவலகத்தில் செப். 26ஆம் தேதி முற்பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
ஏலத்தில் எடுக்க விரும்புவோா், ஏல தேதிக்கு மூன்று தினங்களுக்கு முன்பாக திருநெல்வேலி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் அலுவலக வளாகத்தில் மேற்கூறியவாகனங்களை பாா்வையிட்டு, அன்றைய தினமே முன்வைப்பு ஏலத் தொகையை செலுத்த வேண்டும். புகைப்படத்துடன்கூடிய அடையாள அட்டையை சமா்ப்பித்து ஏலம் எடுத்ததும் ஜிஎஸ்டியையும் சோ்த்து செலுத்தி வாகனங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட வழங்கல் அலுவலரையும், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளரையும் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.