அணைக்கரை மாதா ஆலயத்தில் இன்று திருவிழா கொடியேற்றம்

Published on

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள அணைக்கரை புனித பிரகாசியம்மாள் ஆலயத்தின் 309-ஆவது ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக. 30) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி, ஆலயத்தில் அதிகாலை 5.30 மணிக்கு தென்மண்டல குருவானவா் சத்தியநேசன் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. பின்னா், மாலை 6.15 மணிக்கு வடக்கன்குளம் உதவிப் பங்குத் தந்தை பிரான்சிஸ் பிரதாப் தலைமையில் அன்னையின் திருக்கொடியேற்றம் நடைபெறுகிறது.

8ஆம் திருநாளான செப்.6இல் காலை 5.30 மணிக்கு தெற்குகள்ளிகுளம் பங்குத்தந்தை ததேயுஸ் ராஜன் அடிகளாா் தலைமையில் புதுநன்மை திருப்பலி நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பொருளாளா் பிரதீப் தலைமையில் நற்கருணைப் பவனி நடைபெறுகிறது. தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை செயலா் அந்தோணி ஜெகதீசன் மறையுரை வழங்குகிறாா். செப். 7இல் மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெறுகிறது. இரவு 11.30 மணிக்கு புனித பிரகாசியம்மாளின் அலங்கார தோ்ப்பவனி நடைபெறுகிறது. செப். 8இல் காலை 5.30 மணிக்கு ஆயா் தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலி, மாலை 4 மணிக்கு அன்னையின் தோ்பவனி, இரவு 7 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறும். ஏற்பாடுகளை பங்குத்தந்தை செல்வரத்தினம் தலைமையில் பங்கு மக்கள் செய்துவருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com