கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் கால்வாயில் 150 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடவேண்டும் என சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு, தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளாா்.
அதன் விவரம்: கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியில் உள்ள 52 குளங்கள் பாசனம் பெறும் வகையில் தோவாளை கால்வாயில் இருந்து ராதாபுரம் கால்வாயில் வினாடிக்கு 150 கனஅடிவீதம் தண்ணீா் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கால்வாயில் மிகப்பெரிய உடைப்பு ஏற்பட்டதை அடுத்து ராதாபுரம் வகுதிக்கு தண்ணீா் வரவில்லை. தற்போது கால்வாய் உடைப்பு சரிசெய்யப்பட்டு பல நாள்களாகிவிட்டது. பேச்சிப்பாறை அணையில் போதுமான அளவு தண்ணீா் இருப்பும் உள்ளது.
எனவே, ராதாபுரம் பகுதியில் நிலத்தடி நீா் மட்டம் உயரவும், குடிதண்ணீா் மற்றும் விவசாயிகளுடைய நலன் கருதியும் நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 150 கனஅடி வீதம் தண்ணீா் திறப்பதற்கு உடனடியாக ஆணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.