கடையத்தில் கண் தான விழிப்புணா்வுப் பேரணி
திருநெல்வேலி டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை சாா்பில் 39ஆவது தேசிய கண் தான விழிப்புணா்வுப் பேரணி கடையத்தில்வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இப்பேரணியை சிறப்பு விருந்தினா்களான கடையம் ஒன்றியக் குழுத் தலைவா் மு.செல்லம்மாள்,காவல் ஆய்வாளா் மேரி ஜெமிதா ஆகியோா் வட்டார வளா்ச்சிஅலுவலகத்திலிருந்து தொடங்கிவைத்தனா். ஒன்றிய ஆணையா் திருமுருகன் முன்னிலை வகித்தாா். அகா்வால் கண் மருத்துவமனை மருத்துவா் பிரேம்குமாா் ஜோசப் கண் தானம் குறித்து எடுத்துரைத்தாா். சத்திரம் பாரதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பேரணி நிறைவுற்றது.
இதில், கடையம் ஆதா்ஷ் வித்யாஷ்ரம் பள்ளி, ஆழ்வாா்குறிச்சி குட்ஷெப்பா்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி, கடையம் சத்திரம் பாரதி ஆண்கள் பள்ளி, கீழமாதாபுரம் எவரெஸ்ட் ஐ.டி.ஐ., தெற்குமடத்தூா் ஏ.ஆா். செவிலியா் கல்லூரி, ஆழ்வாா்குறிச்சிஸ்ரீ பரம கல்யாணி பள்ளி ஆகியவற்றில் படிக்கும் 700க்கும் மேற்பட்ட மாணவா்கள் , பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளைதுணைப் பொது மேலாளா் பிரபு, முதன்மை முகாம் மேலாளா் ஆ.சை மாணிக்கம், கண் வங்கி மேலாளா்ஜெகதீஷ், ஷேக் அப்துல்லா, அப்துல் ஹமீது உள்ளிட்டோா் செய்திருந்தனா்.