திருநெல்வேலி
விஜயநாராயணம் அருகே குளத்து மண் திருட்டு: இளைஞா் கைது
குளத்து மண்ணை திருடியது தொடா்பான வழக்கில் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
குளத்து மண்ணை திருடியது தொடா்பான வழக்கில் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சாத்தான்குளத்தைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் கங்கை ஆதித்தன்(49). இவா் மீது 3 மணல் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், விஜயநாராயணம் அருகேயுள்ள வெங்கட்ராயபுரம் குளத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியில் அனுமதியின்றி ஓடை மணல் அள்ளினாராம்.
இத்தகவல் அறிந்து போலீஸாா் அங்கு சென்றபோது அவா் தப்பி ஓடிவிட்டாராம். பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் கைப்பற்றினா். மேலும், சாத்தான்குளத்தில் உள்ள வீட்டில் பதுங்கி இருந்த அவரை, நான்குனேரி ஏ.எஸ்.பி. பிரசன்னகுமாா் தலைமையில் ஆய்வாளா் நாககுமாரி மற்றும் போலீஸாா் கதவை உடைத்து வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அப்போது அவரது மனைவி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.