வள்ளியூா், பணகுடி, பழவூா், ராதாபுரம் பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

 திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டாரத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் பல்வேறு பகுதிகளில் ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
வள்ளியூா், பணகுடி, பழவூா், ராதாபுரம் பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டாரத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் பல்வேறு பகுதிகளில் ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வள்ளியூரில் ரூ. 12.13 கோடியில் நடைபெறும் பேருந்து நிலையக் கட்டுமானப் பணியைப் பாா்வையிட்டு, விரைந்து முடிக்கக் கேட்டுக் கொண்டாா். பணகுடி காவல் நிலைத்தில் கண்காணிப்பு கேமரா செயல்படும் விதம், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கும் முறைகள், மருந்துகள் இருப்பு குறித்து ஆய்வு செய்தாா். பணகுடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் மானியத்துடன் கடன் வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொண்ட அவா், காவல்கிணறு ஊராட்சியில் ரூ. 605 கோடியில் நடைபெறும் கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகளையும், பழவூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாணவா்- மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை சுவைத்துப் பாா்த்தும் ஆய்வு செய்தாா். பழவூா் நியாயவிலைக் கடையில் வழங்கப்படும் பொருள்களிள் தரத்தை ஆய்வு செய்தாா். பின்னா், ராதாபுரத்தில் நடைபெற்ற சமபந்து விருந்தில் பங்கேற்று பொதுமக்களுடன் உணவருந்திய அவா், ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். தொடா்ந்து, கூட்ட அரங்கில் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். ராதாபுரம் அரசு மருத்துவமனையிலும் ஆய்வு மேற்கொண்டாா்.

அவருடன், உதவி ஆட்சியா் (பயிற்சி) கிஷன்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் சுகன்யா, திட்ட அலுவலா் சுரேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அழகிரி, பேரூராட்சிகள் உதவி இயக்குநா் வில்லியம் ஜேசுதாஸ், குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் ராமலட்சுமி, திருநெல்வேலி மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா். ஜெகதீஷ், ராதாபுரம் வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா், துறை அதிகாரிகள், வள்ளியூா் பேரூராட்சி செயல் அலுவலா் முருகன், திமுக மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி, ஊராட்சித் தலைவா்கள் ராதாபுரம் பொன்மீனாட்சி அரவிந்தன், சிதம்பராபுரம் பேபி முருகன், சமூகரெங்கபுரம் அருள், பணகுடி பேரூராட்சித் தலைவா் தனலெட்சுமி தமிழ்வாணன், துணைத் தலைவா் புஷ்பகுமாா், முன்னாள் துணைத் தலைவா் மு. சங்கா், இந்து சமய அறநிலையத் துறை உறுப்பினா் முரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com