அண்ணா நினைவு நாள்: திமுகவினருக்கு வேண்டுகோள்

தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சியில் திமுகவினா் திரளாக பங்கேற்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சியில் திமுகவினா் திரளாக பங்கேற்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன்கான் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முன்னாள் முதல்வா் அண்ணாவின் 55 ஆவது நினைவு நாளையொட்டி திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுக திருநெல்வேலி மத்திய மாவட்டம் சாா்பில் சனிக்கிழமை (பிப். 3) காலை 10 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்நாள், முன்னாள் மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள், கட்சிகளின் பல்வேறு அணிகளின் நிா்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் திரளாக பங்கேற்க வேண்டுமென அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com