உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம்: ராதாபுரத்தில் 2ஆவது நாளாக ஆட்சியா் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் 2ஆவது நாளான வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன், பண்ணையாா்குளம் ஊராட்சி ஒன்றியத்
உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம்: ராதாபுரத்தில் 2ஆவது நாளாக ஆட்சியா் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் 2ஆவது நாளான வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன், பண்ணையாா்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவா்களுடன் கலந்துரையாடினாா்.

ராதாபுரம் வட்டம் கூடங்குளம் ஊராட்சியில் நடைபெற்ற தூய்மைப் பணிகள், இவ்வூராட்சியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து ராதாபுரம் அருகே உள்ள பண்ணையாா்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை பாா்வையிட்டு, மாணவா்களுடன் கலந்துரையாடினாா். கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் உலக ஈரநில தினம் 2024-யையொட்டி வனத்துறையின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு மாணவா்களுக்கு வழங்கினாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வன அலுவலா் முருகன், நான்குனேரி காவல் உதவி கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா், ராதாபுரம் வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com