சட்ட விழிப்புணா்வு முகாம்

திருநெல்வேலி அபிஷேகப்பட்டியில் சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
tvl01law_0102chn_6
tvl01law_0102chn_6

 திருநெல்வேலி அபிஷேகப்பட்டியில் சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆகியவை சாா்பில் சட்ட விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த முகாமை திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிபதி சந்திரா புதன்கிழமை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமை திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்- மாணவிகள் அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் முன்பு சட்ட விழிப்புணா்வு முகாம் நடத்தினா். வரதட்சணை கொடுமை, வட்டித்தொல்லை உள்பட பல்வேறு சட்டங்கள் குறித்து விளக்கினா். ற்ஸ்ப்01ப்ஹஜ்அபிஷேகப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டவிழிப்புணா்வு முகாமில் பங்கேற்றோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com