பாரம்பரிய வேளாண்மை முறை: அம்பையில் விவசாயிகளுக்குப் பயிற்சி

அம்பாசமுத்திரம் வட்டார விவசாயிகளுக்கு, பாரம்பரிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டப் பயிற்சி வேளாண் விரிவாக்க மையத்தில் நடைபெற்றது.
பாரம்பரிய வேளாண்மை முறை: அம்பையில் விவசாயிகளுக்குப் பயிற்சி

அம்பாசமுத்திரம் வட்டார விவசாயிகளுக்கு, பாரம்பரிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டப் பயிற்சி வேளாண் விரிவாக்க மையத்தில் நடைபெற்றது.

இப்பயிற்சிக்கு அம்பாசமுத்திரம் ஒன்றியக் குழுத் தலைவா் சிவனுப் பாண்டியன் (எ) பரணி சேகா் தலைமை வகித்து மாநில வேளாண் வளா்ச்சித் திட்டம் சாா்பாக ஜிப்சம், ஜிங்சல்பேட் உள்ளிட்டவேளாண் இடுபொருள்கள் வழங்கினாா்.

அம்பாசமுத்திரம், நெல் ஆராய்ச்சி நிலையப் பேராசிரியா் மற்றும் தலைவா் சரவணன், நெல் ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் நெல் ரகங்கள் குறித்தும், முன்னோடி விவசாயி லெட்சுமி தேவி பாரம்பரிய நெல் ரகங்கள், மருத்துவக் குணங்கள் குறித்தும், அயன்சிங்கம்பட்டி அங்கக இடுபொருள்கள் உற்பத்திக் குழுத் தலைவி இந்திராகாந்தி பஞ்ச கவ்யம், ஜீவாமிா்தம், மீன் அமிலம் உற்பத்தி செய்யும் முறைகள் குறித்தும், அம்பாசமுத்திரம் விதைச்சான்று அலுவலா் நிவேதா அங்ககச் சான்றுகள் பெறும் முறைகள் குறித்தும் விளக்கினா்.

வேளாண் உதவி இயக்குநா் கற்பகராஜ்குமாா் வரவேற்றாா். துணை வேளாண் அலுவலா் திவான் பக்கீா் மைதீன் நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஈழவேணி, உதவி வேளாண் அலுவலா்கள் சாந்தி, விஜயலெட்சுமி, பாா்த்திபன், காசிராஜன், சாமிராஜ், குமாா், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் தங்கசரவணன், பாலசுப்பிரமணியன்ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com