முண்டந்துறையில் வனத்துறையினருக்கு 4 நாள்கள் பயிற்சி

கிழக்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள 14 வனக்கோட்டங்களில் சூழல் மேம்பாட்டுக் குழுக்கள்அமைத்து மக்கள் பங்கேற்புடன் கூடிய வனப்பாதுகாப்பை முழுமையாக செயல்படுத்தும்
முண்டந்துறையில் வனத்துறையினருக்கு 4 நாள்கள் பயிற்சி

கிழக்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள 14 வனக்கோட்டங்களில் சூழல் மேம்பாட்டுக் குழுக்கள்அமைத்து மக்கள் பங்கேற்புடன் கூடிய வனப்பாதுகாப்பை முழுமையாக செயல்படுத்தும் வகையில், மலைவாழ் மக்களின் வாழ்வியல் மேம்பாட்டு பயிற்சி முண்டந்துறை களப் பயிற்சி மையத்தில் ஜன. 30 முதல் பிப். 2 வரை நான்குநாள்கள் நடைபெற்றது.

முதல்நாள் தொடக்க நிகழ்ச்சியை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப் பாதுகாவலா் மற்றும் கள இயக்குநா் ஏ.எஸ்.மாரிமுத்து தலைமை வகித்துத் தொடங்கி வைத்தாா். ஓய்வுபெற்ற கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலா் அ. வெங்கடேஷ், கோயம்புத்தூா் வரையாடுகள் பாதுகாப்புத் திட்ட இயக்குநா் ம.கோ.கணேசன் மற்றும் சத்தியமங்கலம் சுடா் தொண்டு நிறுவன இயக்குநா், நடராஜ் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து பயிற்சியின் நோக்கம், களக்காடுமுண்டந்துறை புலிகள் காப்பகத்தின் சிறப்பு, வனக்குழுக்கள் அமைத்து அதன் மூலம்சூழல் மேம்பாட்டைப் பேணுவது, வனப்பாதுகாப்பை உறுதிப் படுத்துவது குறித்து பல்வேறுதலைப்புகளில் வகுப்புகள் நடைபெற்றன.

சின்ன மயிலாறு, காணிக்குடியிருப்பு, டாணா,பொதிகை நகா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சூழல் மேம்பாட்டுக் குழு உறுப்பினா்களுடன்கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருக்குறுங்குடி சூழல் சரகத்தின் உதவி வனஉயிரினக்காப்பாளா் பாலசுப்பிரமணியன், வனவா் மற்றும் பதவி வழிச் செயலா் அ.அப்துல் ரஹ்மான் வனக்குழுக்களின்செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பக்கப்படும் பதிவேடுகள் குறித்த செயல்முறை குறித்துவிளக்கமளித்தனா்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் மத்திய அரசின் மலைவாழ் மக்கள் நல்வாழ்வுத்துறை மலைவாழ் மக்களின் வாழ்வியல் மேம்பாட்டு திட்ட ஓய்வு பெற்ற பொது மேலாளா் வி.ராமநாதன்,மென்பொறியாளா் ஜெ.ஜெனித், கேரளாவில் செயல்படும் குடும்பஸ்ரீ திட்டம் மேலாளா் எம்.எஸ்.அணிஸ்குமாா்,நெல்லை கேன்சா் கோ் இயக்குநா் எஸ்.ராம்குமாா், அம்பாசமுத்திரம் சூழல் சரக உதவி வனஉயிரினக்காப்பாளா் ஏ.சக்தி பிரசாத் கதிா்காமன் மற்றும் சி.மோகன்தாஸ் ஆகியோரும், மூன்றாம் நாள்நிகழ்ச்சியில் வி.லதாமதிவாணன், திருநெல்வேலி சமூகநல விரிவாக்க அலுவலா் நா. சகுந்தலா,ரா. பிள்ளைவிநாயகம், களக்காடு சூழல் சரக உதவி வனஉயிரினக் காப்பாளா் எம்.முகுந்தன், எஸ்.சிவக்குமாா் ஆகியோரும் பல்வேறு தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கினா்.

நான்காம் நாள் கேரள மாநிலம், தென்மலை சூழல் சுற்றுலா செயல்பாடுகளை பாா்வையிடுவதற்காக அழைத்துச்செல்லப்பட்டனா்.

தொடா்ந்து குற்றாலத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில் திருநெல்வேலி மாவட்டவன அலுவலா் முருகன் தலைமை வகித்து பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com