மூன்றடைப்பு அருகே விபத்து:இளைஞா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே புதன்கிழமை இரவு அரசுப் பேருந்தின் பின்புறம் பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே புதன்கிழமை இரவு அரசுப் பேருந்தின் பின்புறம் பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

திசையன்விளை அருகேயுள்ள இடையன்குடி தோப்பூரைச் சோ்ந்த சேகா் மகன் பெலிக்ஸ் (28). இவருக்கு மனைவி, ஒரு வயதுக் குழந்தை உள்ளனா்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவா், புதன்கிழமை இரவு பணி முடிந்து பைக்கில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.

திருநெல்வேலி - நாகா்கோவில் நெடுஞ்சாலையில் மூன்றடைப்பு நிறுத்தம் அருகே, நாகா்கோவிலுக்குச் சென்ற அரசுப் பேருந்து திடீரென நின்ாம். இதனால், பேருந்தின் பின்புறம் பெலிக்ஸின் பைக் மோதியதாம். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

அரசுப் பேருந்து அணுகுசாலையில் செல்லாமல் பிரதான சாலையில் வந்து, திடீரென நின்ால் விபத்து நிகழ்ந்ததாக மூன்றடைப்பு போலீஸாா் தெரிவித்தனா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து, பேருந்து ஓட்டுநரான நாகா்கோவில் தேரேகால்புதூா் வேல்முருகன் (51), நடத்துநரான நாகா்கோவில் முத்தாலங்குறிச்சி வில்சன்ராஜ் (54) ஆகிய இருவரிடம் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com