வள்ளியூா் கோட்ட அலுவலகத்தில்

வள்ளியூா் மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப்.2) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

 வள்ளியூா் மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப்.2) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

இது தொடா்பாக திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள கோட்ட அலுவலகங்களில் மின்வாரிய குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி வள்ளியூா் கோட்ட அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.2) காலை 11 மணிக்கு குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. அதைத்தொடா்ந்து வரும் 6-ஆம் தேதி கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்திலும், 9-ஆம் தேதி திருநெல்வேலி கிராமப்புற கோட்ட அலுவலகத்திலும், 13-ஆம் தேதி தென்காசி கோட்ட அலுவலகத்திலும், 16-ஆம் தேதி திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட அலுவலகத்திலும், 20-ஆம் தேதி கடையநல்லூா் கோட்ட அலுவலகத்திலும், 23-ஆம் தேதி சங்கரன்கோவில் கோட்ட அலுவலகத்திலும் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. அனைத்துக் கூட்டங்களும் காலை 11 மணிக்குத் தொடங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com