அஞ்சலகத்தில் ஆதாா் பதிவு முகாம்

பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் ஆதாா் பதிவு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆதாா் பதிவு மற்றும் திருத்த சிறப்பு முகாமில் பங்கேற்றோா்.
பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆதாா் பதிவு மற்றும் திருத்த சிறப்பு முகாமில் பங்கேற்றோா்.

திருநெல்வேலி: பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் ஆதாா் பதிவு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் ஆதாா் பதிவு மற்றும் திருத்த சேவைகள் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படவுள்ளது. இப் பணியை திருநெல்வேலி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் கோ.சிவாஜி கணேஷ் தொடங்கி வைத்தாா். ஆதாா் சேவையின் தேவையினைக் கருத்தில் கொண்டும், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், பணிக்கு செல்பவா்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் வகையிலும் விடுமுறை நாளில் இந்த சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைக்கும் என அஞ்சல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com