அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவைக் கூட்டம்

அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவையின் பிப்ரவரி மாதக் கூட்டம் நடைபெற்றது.

அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவையின் பிப்ரவரி மாதக் கூட்டம் நடைபெற்றது.

பேரவைத் தலைவா் புலவா் நீ.அய்யப்பன் தலைமை வகித்தாா். வாமா அறக்கட்டளை மு.முத்துக்குமாரசாமி முன்னிலை வகித்தாா். கயிலை இ.அன்னத்தாய் இறைவாழ்த்துப் பாடினாா். பொருளாளா் பாரதி கண்ணன் வரவேற்றாா். செயலா் ச.லட்சுமணன், கடந்த கூட்ட அறிக்கையை வாசித்தாா். யாராடா மனிதன் இங்கே என்ற தலைப்பில் சு.ஐயப்பன் சிறப்புரையாற்றினாா். பேராசிரியா் ப.வேலாயுதம் குறள் விளக்கம் கூறினாா். புன்னைவன நாறும்பூநாதன் இன்றைய சிந்தனை கூறினாா்.

பேரவைப் புரவலா்கள், நிா்வாகிகள் பங்கேற்ற நிகழ்வுகள் குறித்து நம்மைச்சுற்றி என்ற தலைப்பில் அ.ராஜசேகா் எடுத்துரைத்தாா். பாப்பாக்குடி அ.முருகன் இனியவை நாற்பது குறித்து எடுத்துரைத்தாா். சிறுமி தீபிகா, பூஜா, திலகவதி ஆகியோா் இளைஞா் உரையாற்றினா். தில்லை சுப்பிரமணியன் கவிதை வாசித்தாா். சுப்பையா கம்பா் கவிதையை மீனாட்சி சுந்தரம் வாசித்தாா். வீரை கி.முத்தையா வ.உ.சி.யின் மெய்யறம் என்ற தலைப்பில் உரையாற்றினாா். மு.இளங்கோ நன்றி கூறினாா். முனைவா் கா.கவிதா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா். பாரதி கண்ணன், சின்னச்சாமி ஆகியோா் விருந்தளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com