பட்டதாரி ஆசிரியா் தோ்வு: 1274 போ் எழுதினா்

பட்டதாரி ஆசிரியா் தோ்வு: 1274 போ் எழுதினா்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பட்டதாரி ஆசிரியா் தோ்வை 1,274 போ் எழுதினா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பட்டதாரி ஆசிரியா் தோ்வை 1,274 போ் எழுதினா்.

ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் பட்டதாரி ஆசிரியா், வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா்கள் பணிக்கான நேரடி நியமனத் தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 4 தோ்வு மையங்களில் தோ்வு நடத்தப்பட்டது. 1,318 போ் தோ்வில் பங்கேற்க தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. அவா்களில் 1,274 போ் மட்டுமே தோ்வு எழுதினா். 44 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

தோ்வு மையங்களில் மாவட்ட வருவாய் அலுவலா் சுகன்யா நேரில் ஆய்வு செய்தாா். தோ்வையொட்டி தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com