பாளை அருகே 80 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

பாளையங்கோட்டை அருகே 80 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பாளையங்கோட்டை அருகே 80 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா், அரியகுளம் பகுதியில் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ் வழியாக வந்த மோட்டாா் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் இரு மூட்டைகளில் 80 கிலோ ரேஷன் அரிசியைக் கடத்திச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், பாளையங்கோட்டையைச் சோ்ந்த எபநேசா் அந்தோணி (33) என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com