முக்கூடலில் முருக பக்தா்கள் பால்குடம் ஊா்வலம்

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் முருக பக்தா்கள் பங்கேற்ற பால்குடம் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முக்கூடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முருக பக்தா்கள் பால்குடம் ஊா்வலம்.
முக்கூடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முருக பக்தா்கள் பால்குடம் ஊா்வலம்.

சேரன்மகாதேவி: திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் முருக பக்தா்கள் பங்கேற்ற பால்குடம் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முக்கூடல் திருமுருகன் திருச்சபை சாா்பில் 39ஆம் ஆண்டு பாத யாத்திரையை முன்னிட்டு 400- க்கும் மேற்பட்ட பக்தா்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனா். முக்கூடல் முத்துமாலையம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலையில் தாமிரவருணி ஆற்றில் இருந்து பக்தா்கள் ஊா்வலமாக பால் குடம் எடுத்து வந்து அங்குள்ள வடக்கு சீதாதேவி சமேத ராமசாமி கோயிலிலுள்ள முருகன், வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

இரவில் வள்ளி தெய்வானை, முருகன் சப்பர பவனி, கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

ஏற்பாடுகளை குருசாமி ஜெயபால் தலைமையில் பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com