வீரவநல்லூரில் பெண் மீது தாக்குதல்: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பெண்ணை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சேரன்மகாதேவி: திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பெண்ணை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

வீரவநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் உஷா (37). இவரது மகளிடம் இதே ஊரைச் சோ்ந்த முகேஷ் ராஜா (19) பேசியதாக கூறப்படுகிறது. இதை உஷா கண்டித்தாராம். இதனால் ஆத்திரடைந்த முகேஷ் ராஜா, சனிக்கிழமை உஷாவை அவரது வீட்டின் அருகே வைத்து அவதூறாக பேசியதுடன் தாக்கி, மிரட்டல் விடுத்துச் சென்ாக கூறப்படுகிறது. புகாரின்பேரில், வீரவநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் அல்லி அரசன் வழக்குப் பதிந்து பெண்ணை தாக்கிய முகேஷ் ராஜாவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com