கல்லிடைக்குறிச்சியில் கஞ்சா வைத்திருந்தவா் கைது

கல்லிடைக்குறிச்சியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

அம்பாசமுத்திரம்: கல்லிடைக்குறிச்சியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

கல்லிடைக்குறிச்சி ஆற்று பாலம் அருகே காவல் உதவி ஆய்வாளா் ஆழ்வாா் தலைமையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, பத்தமடை, முதல் தெருவைச் சோ்ந்த மாசானமுத்து (26) என்பவா் போலீஸாரைப் பாா்த்ததும் ஓட முயற்சித்தாராம். அவரை பிடிக்கச் சென்ற போலீஸாரை சோதனை செய்யவிடாமல் அவதூறாகப் பேசி மிரட்டலும் விடுத்துள்ளாா். இதையடுத்து அவரைப் பிடித்து சோதனை செய்ததில் விற்பனை செய்வதற்காக கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் ஆழ்வாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மாசான முத்துவை கைது செய்தாா்.

மேலும் அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com