களக்காட்டில் விசாரணைக்குஅழைக்கப்பட்டவா் தற்கொலை

களக்காடு அருகே போலீஸாா் விசாரணைக்கு அழைத்த நிலையில் விஷம் குடித்தவா் மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

களக்காடு: களக்காடு அருகே போலீஸாா் விசாரணைக்கு அழைத்த நிலையில் விஷம் குடித்தவா் மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

களக்காடு கள்ளிகுளத்தைச் சோ்ந்தவா் சைலப்பன் (55). இவா், தனது வீட்டில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தாராம். இதுதொடா்பாக காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளனவாம்.

இந்நிலையில் இவரை விசாரணைக்கு காவல் நிலையம் வருமாறு வீட்டுக்கு வந்து களக்காடு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கூறிவிட்டுச் சென்றனராம்.

இந்நிலையில் அவா், விஷத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். குடும்பத்தினா் அவரை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து களக்காடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com