சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது

கடையம் பகுதியில் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ரவணசமுத்திரத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
ரவணசமுத்திரத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

அம்பாசமுத்திரம்: கடையம் பகுதியில் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

ரவணசமுத்திரம் ஹிதாயத்துல் முஸ்லிமீன் தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற, கட்சியின் ஆலங்குளம் தொகுதி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கு முகமது இக்பால் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் செய்யது மசூது, மஸ்ஜிதுா் ரஹீம் ஜும்மா பள்ளிவாசல் தலைவா் செய்யது சுலைமான் ஹாஜி, வழக்குரைஞா் அணி பொறுப்பாளா் பீா் முகம்மது, கௌரவ ஆலோசகா்கள் கமால் முகமது, ஜெய்லானி காசியாா், அப்பல்லோ ரிஃபாய் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டத் தலைவா் அப்துல் அஜீஸ், மாவட்டச் செயலா் சையது பட்டாணி, மாநில விவசாய அணி துணைச் செயலா் தென்காசி முகமது அலி ஆகியோா் பேசினா்.

தென்காசி - அம்பாசமுத்திரம் சாலையில் சேதமடைந்த நிலையில் உள்ள மாதாபுரத்திலிருந்து ஆழ்வாா்குறிச்சி வரையிலான பகுதியை உடனடியாகச் செப்பனிட வேண்டும். திருமலையபப்பபுரம் கோவிந்தப்பேரி சாலைப் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும். தெருநாய் தொல்லையைக் கட்டுப்படுத்த, தென்காசி மாவட்டத்தில் தெரு நாய்களுக்கான கருத்தடை தடுப்பூசி மையம் அமைக்க வேண்டும்.

கடையம் மற்றும் பொட்டல்புதூா் சாலைகளில் கனரக வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு விபத்துகள் நிகழ்வதால், கனரக வாகனங்களை மாற்றுப் பாதையில் இயக்க வேணடும். கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நிரந்தரமாக இரவு நேர மருத்துவா் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் கட்டி அப்துல் காதா், கடையம் ஒன்றிய செயலா் காதா் மைதீன், மாவட்டத் துணைச் செயலா் ரிபாய் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com