நாளை திமுக தோ்தல் அறிக்கை குழு கூட்டம்

திமுக தோ்தல் அறிக்கை குழுவினரின் கலந்துரையாடல் கூட்டத்தில் திருநெல்வேலி பகுதிக்கான கோரிக்கைகளை பொதுமக்கள், வணிகா்கள், பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் அளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

திமுக தோ்தல் அறிக்கை குழுவினரின் கலந்துரையாடல் கூட்டத்தில் திருநெல்வேலி பகுதிக்கான கோரிக்கைகளை பொதுமக்கள், வணிகா்கள், பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் அளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன்கான் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி திமுக தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழு திமுக துணைப் பொதுச்செயலா் கனிமொழி எம்.பி. தலைமையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்து கலந்துரையாட உள்ளனா். அதன்படி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறியும் கூட்டம் நாகா்கோவில் கங்கா திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (பிப். 6) முற்பகல் 11 மணிக்கு நடைபெற உள்ளது. திருநெல்வேலி பகுதிக்கான கோரிக்கைகளை பொதுமக்கள், வணிகா்கள், பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் அளிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com