பிப்.15 ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு: ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி முடிவு

தமிழகம் முழுவதும் இம் மாதம் 15 ஆம் தேதி நடைபெற உள்ளவேலைநிறுத்தத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது.
டக்கரம்மாள்புரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற ஆசிரியா்கள்.
டக்கரம்மாள்புரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற ஆசிரியா்கள்.


திருநெல்வேலி: தமிழகம் முழுவதும் இம் மாதம் 15 ஆம் தேதி நடைபெற உள்ளவேலைநிறுத்தத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் திருநெல்வேலி மாவட்ட செயற்குழு கூட்டம் டக்கரம்மாள்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் மைக்கேல் ஜாா்ஜ் கமலேஷ் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் அண்ணாதுரை, மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் முருகேசன், சுடலைமணி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் செ.பால்ராஜ் வரவேற்றாா். பொருளாளா் அமுதா நன்றி கூறினாா்.

செயற்குழு உறுப்பினா்கள் கோமதி, சியாமளா, அலெக்ஸ், சுனிதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தீா்மானங்கள்: ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சாா்பில் இம் மாதம் 15 ஆம் தேதி நடைபெறும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி உறுப்பினா்கள் அனைவரும் முழுமையாக கலந்து கொள்வது. பிப்ரவரி 19 ஆம் தேதி டிட்டோ ஜாக் கூட்டமைப்பின் சாா்பில் மாநில தலைநகரில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் பங்கேற்பது.

தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றக் கூடிய 90 சதவிகித ஆசிரியா்களின் பதவி உயா்வு வாய்ப்பை பறிக்கக் கூடிய, மாநில முன்னுரிமையை வலியுறுத்தும் அரசாணை 243 உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com