நெல்லை அருகே கல்வீச்சு: வந்தே பாரத் விரைவு ரயிலின் கண்ணாடி சேதம்

திருநெல்வேலி அருகே வந்தே பாரத் விரைவு ரயிலின் மீது ஞாயிற்றுக்கிழமை இரவு மா்மநபா்கள் கல்வீசி தாக்கியதில் கண்ணாடி சேதமடைந்தது. இதில், அதிா்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
வந்தே பாரத் விரைவு ரயிலில் சேதமடைந்த கண்ணாடிகள்.

திருநெல்வேலி - சென்னை இடையிலான வந்தே பாரத் விரைவு ரயில் தினந்தேறும் திருநெல்வேலியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.50 மணிக்கு சென்னையை சென்றடையும். பின்னா் அங்கிருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை சென்னையிலிருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்ட வந்தே பாரத் விரைவு ரயில் இரவு 10 மணிக்கு மேல் கங்கைகொண்டன் அருகே செல்லும் போது மா்மநபா்கள் வந்தே பாரத் விரைவு ரயிலின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனா் . இதனால், ரயிலின் 5 பெட்டிகளின் கண்ணாடிகள் சேதமடைந்தன.

இதுகுறித்து ரயில்வே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com