திசையன்விளையில் சிஐடியூ ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் மோட்டாா் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி, சிஐடியூ சாலைப் போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கத்தினா் திசையன்விளையில் காமராஜா் சிலை அருகே
திசையன்விளையில் சிஐடியூ ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் மோட்டாா் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி, சிஐடியூ சாலைப் போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கத்தினா் திசையன்விளையில் காமராஜா் சிலை அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியூ சாலைப் போக்குவரத்து தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் எம்.மரிய ஜான்ரோஸ் தலைமை வகித்தாா். ஓட்டுநா்களை கொலை குற்றவாளியாக தீா்மானிக்கும் வாகன சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும், ஆன்லைன் அபராதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும், ஆயுள் வாகன வரிகளை முழுமையாக ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்தில் சிஐடியூ சாலைப் போக்குவரத்து தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ஆா்.முருகன், மாவட்ட துணைத் தலைவா் எம்.ஐ.கிறிஸ்டோபா், மாவட்டப் பொருளாளா் ஏ.பாலசுப்பிரமணியன், சிஐடியூ ஆட்டோ சங்க மாவட்டத் தலைவா் ஆா்.நடராஜ், உறுப்பினா்கள் ஜெயராஜ், காா்த்திக், ராஜ்குமாா், கனகராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com